நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

எங்கள் தொழிற்சாலைகளில் சுற்றுசூழலுக்கு உகந்த, ஆற்றல்மிக்க ஆபரேட்டிங்க் சிஸ்டம்களை கடைபிடித்து  சுற்றுச்சூழலில் மிக உயர்ந்த தரத்தை அடைவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ரத்னகிரியில் ஐஎஸ் ஒ 14001றின் கீழ் சர்வதேச தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பராமரிப்பு சிஸ்டமை எங்கள் நிறுவனம் ரத்னகிரியில் ஏற்படுத்தியுள்ளது.   காற்று, நீர், ஒலி, தீங்குவிளைவிக்கும் கழிவுகள், ஈ கழிவுகள் போன்றவற்றில் சுற்றுச்சூழல் வழிகுறைகளை ஃபினோலெக்ஸ்  முழுமையாக கடைப்பிடித்து, சமுதாயத்தில் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் கேட்டை குறைக்கிறது. ரத்னகிரியில் ஃபினோலெக்ஸ் 43 எம் டபிள்யூ கேப்டிவ் மின் நிலையம் (சுற்றுச்சூழல் மற்றும் காடு அமைச்சகம் வழங்கிய) ஃப்ளை ஏஷ்  அறிவிப்பின் படி ஃப்ளை ஏஷை 100%  பயன்படுத்திக்கொள்கிறது.

ரத்னகிரியில் சமீபத்திய ப்ராசெஸ் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளுடன் ஒரு விஸ்தாரமான பாதுகாப்பு அமைப்பை நிறுவி இருக்கிறோம். ரத்னகிரியிலுள்ள  பிவிசி தயாரிப்பு தொழிற்சாலைக்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், மஹாராஷ்டிரா மற்றும் தேசிய பாதுகாப்பு கவின்சிலின் ஆணையம் மஹாராஷ்ட்ரா சேப்டரிடமிருந்து “2015தின் சிறந்த பாதுகபபு நடவடிக்கைகள் விருதை” பெற்றது.  தற்கால பாதுகபபு உபகரணங்களுடன் எங்கள் எல்லா தயாரிப்பு தொழிற்சாலைகளும்  சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.  மற்ற பெட்ரோகெமிகல் தொழி₹ஆலைகளுக்கு இணையாக நெருப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய தீயணைப்பு வீரர்கள் எங்கள் தொழிற்சாலையில் உள்ளனர்.  தீயணைக்கும் முறை தயார் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்க, போலிப்பயிற்சிகள் மற்றும் தீயிலிருந்து மீட்கும் பயிற்சிகள் “ஆன் சைட் எமர்ஜன்ஸி மேனேஜ்மெண்ட் திட்டத்தின்  படி ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன, அதில் தொழிற்சாலையின் முக்கியஊழியர்கள் பங்கேற்கின்றனர்.  அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் சமுதாயங்கள், மற்றும் ரத்னகிரி நகரம் மற்றும் ரத்னகிரியை சுற்றியுள்ள தொழிலகங்களுக்கு  தீயணைப்பு சேவை வழங்கப்படுகிறது. “சுயநலமற்ற சேவை”யில் ஃபினோலெக்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.

காற்று மாசுப்படுவதை தடுத்தல்

தேசிய சுற்றுப்புற காற்றுத்தரத்தின் அளவை ஒத்திருக்க ஃபினோலெக்ஸ் ப்ரசெஸ்களை நிறுவியுள்ளது. பார்டிகுலேட் மேட்டர்கள், சல்ஃபர் டை ஆக்ஸைட், மற்றும் நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் உள்பட எல்லா அளவுகளும் தரத்திற்கேற்ப அளக்கப்படுகின்றன. எல்லா ஸ்டேக் வெளியேற்றங்களும் ஒழுங்காக கண்காணிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு கட்டுபபடு வாரியத்தின் அளவீடுகளின் படி ஃப்ளூ வாயு தரம் கட்டுப்படுத்தப்படுகிறது.  நேரடி கண்காணிப்பு அமைப்பிற்காக சிபிபி ஸ்டேக் பொருத்தப்பட்டுள்ளது, எம் பி சி பியுடன் இணைக்கப்பட அது தயார் நிலையில் உள்ளது.

கழிவுகள் வெளியேற்றம் ஒட்டுமொத்தமாக இல்லை

ரத்னகிரி தொழிற்சாலையை சுற்றியுள்ள  சுற்றுப்புறம் மற்றும் நீரை அசுத்தங்கள் மற்றும் மாசுக்களிலிருந்து விலக்கி வைக்கும் முயற்சியில் பிவிசி தயாரிக்கும் போது உற்பத்தியாகும் திரவ கழிவுகள் உலகத் தரம் வாய்ந்த சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.  இந்த சுத்திர்கரிப்பில் ஈக்வலைசேஷன், ஃப்ளோக்குலோஷன், ஃப்லாக் பிரித்தல், ஏரேஷன் ஏக்டிவேட் செய்யப்பட்ட  ஸ்லட்ஜ் ப்ராசேஸ்,  க்ளாரிஃபிகேஷன், ஆக்டிவேட் செய்யப்பட்ட கார்பன்  ஃபில்டருடன் பாலிஷிங்க் செய்யப்படும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் எம்பிசிபின் அளவீடுகளின் படி இருப்பது தினமும் சோதிக்கப்படும்.. மேலும் வடிகட்டுவதன் மூலமும், தாதுப்பொருட்களை நீக்கிய பின்னும் அது  ப்ராசெஸ் நீருக்கு அனுப்பப்படுகிறது.  அதன் மூலம் பூஜ்ய வெளியேற்றம் எனும் லட்சியத்தை ஃபினோலெக்ஸ் வெற்றிகரமாக அடைந்துவிட்டது.  மீதமுள்ள நீர்   தோட்டத்திற்கும், தாவரங்களுக்கும், மரம் நடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  ஆழ் கிணறு நீரை அடிக்கடி சோதிப்பதன் மூலம் தரையடி நீரின் தரம் கண்காணிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கும் உறுதி

பிவிசி தயாரிப்பு நிலயம் மற்றும் கேப்டிவ் மின் நிலய வளாகத்தில் மாம்பழம், சப்போட்டா, முந்திரி, தேங்காய் எனும் பழம் தரும் மரங்கள் உள்பட  50000துக்கும் மேற்பட்ட பல வகை மரங்களை ஃபினோலெக்ஸ் நட்டு பராமரித்து வருகிறது. மரம் நடும் நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் 5 ஆம் தேதி ஜூன் துவங்கும் ஒரு வார உலக சுற்று சூழல் தினத்தில்  மேற்கொள்ளப்படுகிறது.

மழை நீர் சேமிப்பு

அருகிலுள்ள நதியிலும், நீரேற்றங்களிலும்  அணைகளை கட்டி தொழிற்சாலையில் வீணாகும் நீரை இரு நீர் தேக்கங்களில் ஃபினோலெக்ஸ் சேமிக்கிறது. இந்த தேக்கங்கள் அருகிலுள்ள நிலத்திலிருந்து மழை நீரையும் சேமிக்கின்றன.  இந்த செக் அணை அருகிலுள்ள  நிலத்தடி நீரை உயர்த்த உதவி ஆண்டு மூழுவதும் குடி நீர் வழங்க இந்த நீர் தேக்கங்கள்  உதவுகின்றன.

 

விசாரணை வடிவம்

For any trade enquiry call

18002003466

Enquiry Form

Fill in the details below and one of our executives will get back to you shortly.