கல்வி

முகுல் மாதவ் வித்யாலயா (எம் எம் வி) கிராமப்புற மகக்ளுக்கு  மலிவான செலவில் தரமான ஆங்கிலக் கல்வியை வழங்க ரத்னகிரியில் கோலப்பில் 2010 ஜூன் 24 அன்று நிறுவப்பட்டது.

151 மாணவர்களுடன்  சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட எம் எம் வி  சீராக வளர்ந்து ப்ரீ நர்ஸரியிலிருந்து ஆறாம் வகுப்பு வரை எஸெஸ்ஸி அங்கீகாரத்துடன் 621 மாணவர்களை கொண்டுள்ளது. பள்ளி முற்போக்கான வளர்ச்சியைக் காட்டியுள்ளது மற்றும் வகுப்புகளை வகுப்புக்கு அதிகரித்துள்ளது எக்ஸ்.

20000 சதுர அடியில் இரு கட்டிடங்கள் உள்ள முகுல் மாதவ் வித்யாலயா  மாணவர்களின் முழுமையான மேம்பாட்டிற்கு தகுந்த வாய்ப்புக்களை வழங்குகிறது.

நிதியுதவிகள்

பொறியியல், கட்டிடக்கலை மற்றும் முனைவருக்கான கல்விக்கு முகுல் மாதவ் அறக்கட்டளை நிதியுதவியை வழங்குகிறது.  பூனேயில் கே ஈ எம் மருத்துவமனையில் தங்கி இருக்கும் மருத்துவர்களுக்கு நாங்க ஃபெல்லோஷிப்களை நிறுவி இருக்கிறோம். முதுகலை பயிலும் மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மசாரில் நிகழ்வுகள்

நாங்கள் நிதியுதவியை நீட்டித்து, குஜராத் மசாரில் ப்ராத்மிக் பள்ளிக் கூடம் மற்றும் கிர்தர் வித்யாலயாவிற்கு ஆதரவு தருகிறோம்.  இந்த இரு பள்ளிகளும் கம்பெனியின் தொழிற்சாலைக்கு வெகு அருகே இருக்கின்றன. பென்ச்சுகள், மேஜைகள், ஆசிரியரின் மேஜைகளை ஃபினோலெக்ஸ் வழங்குவதுடன், மாணவர்கள் இணையத்துடன் இணைந்திருக்க கணினிகளையும் வழங்கியுள்ளது.  மாணவர்களை அவர்களுடைய கல்வியில் ஊக்குவிக்க  தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு நிறுவனம் பரிசுகளை வழங்குகிறது.

பள்ளிகளை தத்தெடுத்தல்

2006றில் பஞ்சகனியில் 2 நகராட்சி பள்ளிக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு, தத்தெடுக்கப்பட்டன. அவற்றில் அடிப்படை உள்கட்டமைப்புகள் மற்றும் நகர்புற கல்வி வசதிகளின் பற்றாக்குறை இருந்தது. அதிலிருந்து  புதிய வகுப்பறைகளை கட்டி, விஞ்ஞான ஆய்வுக் கூடத்தை அமைத்து அவர்களுடைய உள்கட்டுமானத்தை மேம்படுத்தினோம்.  பெண்களின் தொழிற்பயிற்சி மையத்திற்காக  தையல் இயந்திரங்களை கோய்யாக வழங்கினோம்.  தபலாக்கள், டிவி, விசியார் செட், ப்ரொஜெக்டர், கல்விப்புத்தகங்கள், சிடிக்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினோம்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொருளாதார பிரச்சனைகள் உள்ள பின்னணியிலிருந்து வருவதை அறிந்தோம்.  ஷூக்கள், சாக்ஸ்கள், ஸ்வெட்டர்கள் போன்ற அடிப்படை உடைகள் அவர்களிடம் இல்லை. பஞ்ச்கனியின் கடும் குளிர்காலத்தில் அவை மிக முக்கியமானவை.  இதனால் குளிர்கால மாதங்களில் அதிகம் பேர்  பள்ளிக்கு வருவதில்லை. எனவே தேவைக்கேற்ப அவற்றை வழங்கினோம்.

முன்பு மராத்தி வழிமுறையில் கல்விக்கற்ற  ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தம வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆங்கிலமும், கணிதமும், விஞ்ஞானமும் ஆங்கிலத்தில் கற்க  ஆசிரியர்களை நியமித்து  ஆங்கில வழிக் கல்வியை முகுல் மாதவ் அறக்கட்டளை அறிமுகப்படுத்தியது. வாரம் தோறும் எங்கள் ஆசிரியர்களுக்கு இங்கே அமர்த்தப்பட்ட ஒரு ஆசிரியர் ஆங்கிலம் கற்பிக்கிறார்.

Gallery

விசாரணை வடிவம்

For any trade enquiry call

18002003466

Enquiry Form

Fill in the details below and one of our executives will get back to you shortly.