சமூக நல

பெண்கள் அதிகாரம்

நமுது சமுதாயத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை வழங்க, பன்சாப்பின், கிராமின் மஹிலா விகாஸ் கேந்த்ரா (கிராம மகளிர் மேம்பாட்டு மையம்) பெண்களுக்காகவும், முகுல் மாதவ் வித்யாலயாவின் மாணவர்களின் தாய்மார்களுக்காகவும் முகுல் மாதவ் ஃபவுன்டேஷன் கணினி வகுப்புகளை ஆரம்பித்தது. 2013றில் முகுல் மாதவ் ஃபவுன்டேஷன் வளாகத்தில் இந்த வகுப்பு தொடங்கியது, அது குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் பள்ளியின் கணினி ஆசிரியரால் நடத்தப்படுகின்றன.

எங்கள் மாணவர்களின் தாய்மார்களுக்கு கல்விகற்பிப்பது,  ஆங்கிலத்தை பரிச்சயம் ஆக்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம், குழந்தையின் கல்வியின் மேம்பாட்டுக்குக்கான பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்வதை அது சுலபமாக்குகிறது.  இந்த கருத்தை மனதில் கொண்டு, அவர்களுக்கு நாங்க அடிபப்டைய ஆங்கில பயிற்சியையும் வழங்குகிறோம்.

அது மட்டுமில்லாமல் கிராமத்து மகளிரின் வருமானத்தை அதிகபட்சமாக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, கிராமின் மஹிலா விகாஸ் கேந்த்ரா (கிராம மகளிர் மேம்பாட்டு மையம்)வை சேர்ந்த மகளிருக்கு “கைவினை பொருள் பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கிராமவாசிகள் சந்திக்கும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஒரு சிறு முயற்சியாக, அந்தந்த கிராமத்து கிராம பஞ்சாயத்துகளின் உதவுயுடன்  கோலப்பை அடுத்துள்ள பகுதிகளில்  குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

ராஷ்ட்ரிய கிராமின் பீயே ஜல் யோஜனாவின் ( தேசிய கிராமப்புற குடிநீர் வழங்கு திட்டத்தின் ) கீழ்  கொலம்பே, பட்யே, ஃபன்சாப் கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஃபினோலெக்ஸ் உதவியது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் வரை, பம்புகள், குழாய்கள் மற்றும் நீர் தொட்டிகளின் மூலம் கிணற்றிலிருந்து கிராமங்களுக்கு நீரை வழங்க ஏற்பாடு செய்தோம். நீர் பற்றாக்குறையில் கவனம் செலுத்திய பின்,  ரதற்போதுள்ள நீர் வழங்கும் திட்டங்களுக்கான பழுதுபார்க்கும் செலவு, மின்சாரக்கட்டணம் போன்றவற்றை சமாளிக்கவும் கிராமப்பஞ்சாயத்துக்களுக்கு இந்த நிறுவனம் நிதியுதவி வழங்கியது.

நீர் சேமிப்பு

உலக நீர் தினத்தன்று  ஒரு வீடியோவின் மூலம் மக்களை எங்கள் டிஜிட்டல் மேடையில் சந்தித்து நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினோம்.  பார்வையாளர்களுக்கு நீரை சேமிக்க எளிமையான வழிகளை வழங்கி,  அதனை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படி மேற்கொள்வது என்று குறிப்புக்களை கொடுத்தோம். மஹாராஷ்ட்ராவில் மண்டலங்களில் கடும்  வறட்சியை சந்தித்தது,  நீர் பற்றாக்குறை ஏற்பட்டது,  அப்போதுதான் தேவைப்படும் விவசாயிகளுக்கு  நீரை கொடையாக வழங்க நாங்கள் முடிவு செய்தோம். மஹாராஷ்ட்ராவில் மண்டலங்களில் கடும்  வறட்சியை சந்தித்தது,  இந்த ஆண்டு கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே எங்கள் நகர்புற நேயர்களை கிராமப்புற இந்தியாவுடன் இணைக்க ஒரு வழியைக் கண்டோம்.  இதனை கருத்தில் கொண்டு,  நீரை மிச்சப்படுத்த உறுதி மொழி எடுக்கும் படி மக்களிடம் கேட்டுக் கொண்டோம். அப்படி உறுதி எடுத்த  தொகை மஹாராஷ்டிரத்தில் வறட்சியால் வாடும் லாட்டூர் பகுதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

2015 ஜூன் 5தாம் தேதி, உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று #பானி கி தர மத் பஹாவோ (நீரைப் போல் பாய்ந்து ஓடா விடாதே) எனும் புதுமையான பிரசாரத்தை எங்கள் சமூக ஊடக மேடைகளில் துவங்கினோம்.  நீரை வீணாக்குவதினால் ஏற்படும் பிரச்சனையையும்  நீர் சேமிப்பின் முக்கியத்துவத்திற்கான விழுப்புணர்வை ஏற்படுத்தவும்  ஒரு வீடியோவின் மூலம் நாங்க பிரசாரத்தை துவக்கினோம். #பானி கி தர மத் பஹாவோ (நீரை நீரைப் போல் பாய்ந்து ஓட விடாதே) எனும் கவரக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி, நீரை காக்க வேண்டும், வீணாக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம்.

அதற்கும் மேலாக  சிஎஸ்ஆர் நடவடிக்கைகளின் ஒரு பாகமாக,  கிராமவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தையும் ஃபினோலெக்ஸ் எடுத்துக் கொண்டுள்ளது. அதன் படி நீர்  சுத்திகரிக்கும் நிலயம் ஒன்று பாத்யே கிராம கிணறுகளில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது, அதன் மூலம் கிராமம் பெரும் நன்மை பெறுகிறது.

 

Gallery

விசாரணை வடிவம்

For any trade enquiry call

18002003466

Enquiry Form

Fill in the details below and one of our executives will get back to you shortly.