பேண்தகைமைச்

ஒரு நிறுவனமாகவும், நாங்கள் எப்படி வியாபாரம் செய்கிறோம் என்பதற்கும் நீடிப்பு திறன் ஒரு முக்கிய பாகம். நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் மட்டுமல்ல, சுற்றுசூழல், சமூகப் பொறுப்பு, மற்றும் ஆளுமையின் பொது கோட்பாடுகளுடன் நாங்கள் ஒத்திருக்க வேண்டும்.  எனர்ஜிக்கும், வளங்களை சேமிப்பதற்கும் ஃபினோலெக்ஸ் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனர்ஜியை சேமிப்பதில் அல்லது உகந்த வழியில் பயன்படுத்துவதிலும் நீடிப்புதிறனை முழுமையாக அடையா நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளை தந்து கடந்த காலத்தில் எங்கள் அணுகுமுறை அங்கீகரிக்கப்பட்டது.

 

சமீபத்திய பாராட்டு

க்ரீன் தயாரிப்பு எக்ஸலென்ஸ் விருது 2014 :மெரிட் சான்றிதழ், பிலீவர்ஸ் கேடகரி ஃப்ராஸ்ட் & சலிவனிடமிருந்து

நேஷனல் சிஎஸ்ஆர் லீடர்ஷிப் காங்கிரஸ் மற்றும் விருதுகள் வழங்கிய வாட்டர் கம்பெனி ஆஃப் தி இயர்  விருது

ப்ளூடார்ட் குளோபல் சி எஸ் ஆர் எக்சலன்ஸ் மற்றும் லீடர்ஷிப் விருதுகள் வழங்கிய “சப்போர்ட் & இம்ப்ரூவ்மென்ட் இன் குவாலிடி ஆஃப் எடுகேஷன் விருது

 

சுற்றுசூழல்

ஃபினோலெக்ஸில் சுற்றுப்புற சமச்சீர் நிலைக்கு மரியாதை தந்து, பாதுகாத்து, அதனை பராமரிக்கும் முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். எங்கள் செயல்களில் சுற்றுசூழல் பாதுகாப்பு ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அடிக்கடி ஆடிட் செய்வதன் மூலம் எல்லா களங்களிலும்  சுற்றூசூழல் காரணிகளை கண்காணித்து பாதுகாக்க  ஒரு சுற்றுசூழல் பராமரிப்பு குழு இயங்குகிறது. அந்த ஆடிட்டுகள் மேலாண்மையால் பரிசீலிக்கப்படுகின்றன.  எங்கள் ரத்னகிரி தொழிற்சாலை ஜெர்மனியின் டியூவிடமிருந்து ஐஎஸ்ஓ 14001:2015 சான்றிதழ் பெற்ற ஒன்றூ. உலோகத்தின் தேவையை எங்கல் பாலிமர் தயாரிப்பு பூர்த்தி செய்து, மேல்பறப்பில் அரிப்பு ஏற்படுவதை பாதுகாத்து, சுத்தமான, அரிப்பில்லாத, ஆற்றல்மிக்க சக்தியுடன் கூடிய நீடித்துழைக்கும் நீர் போக்குவரத்து அமைப்பை வழங்குகிறது.

 

மாசுக்கட்டுப்பாடு

எங்கள் பிவிசி ரெசின் தொழிற்சாலை கம்ப்யூட்டர் கட்டுப்பாடுடன் கூடிய மூடிய அமைப்பில் இயங்குகிறது. சுத்திகரிக்கப்படாத வெளியேற்றங்கள் எதுவும் வெளியே விடப்படுவதில்லை. தேங்கி இருக்கும் வாயுக்கள் மற்றும் புகைப் போக்கிகள் மதிப்புமிக்க தனியார் நிறுவனங்களால் ஒழுங்காக கண்காணிக்கப்படுகின்றன. தொழிற்சாலையிலிருந்து வரும் ஃப்ளு கேஸ் மற்றும்  தேங்கிய வாயுவும் நீர் கழிவுகளும் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சர்வர்களுடன் நேராக இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேசிய தரப்படி சுற்றுப்புற காற்று பராமரிக்கப்படுகிறது.   சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து காற்றின் சாம்பிள்கள் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.

 

நீர் சேமிப்பு

 

அணைகள்

ரத்னகிரி தொழிற்சாலையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தோர்லி நதியில் ஃபினோலெக்ஸ் அணை கட்டி இருக்கிறது.  கடலுக்கு பாய்ந்திருக்கக் கூடிய மழை நீரை பிடித்து வைக்க இந்த அணை உதவுகிறது. சுற்றுப்புற பகுதிகளில் தரையடி நீர்மட்டத்தை உயர்த்த இது உதவியது.

 

மழை நீர் சேகரிப்பு

ஃபினோலெக்ஸ் ஜியோமெம்பிரேன் ஓரங்கள் உள்ள இரு மிகப்பெரிய கொள்ளளவுள்ள மேல்பறப்பு நீர் தேக்கங்களை  3 லட்சம் கன மீட்டர் உள்ள எங்கள் ரத்னகிரி தொழிற்சாலையில் கட்டியுள்ளோம்.  இயற்கையான மேற்பரப்பை பயன்படுத்தும் இந்த தேக்கங்கள் மழை நீர் சேமிப்பில் அதிக அளவு உதவுகின்றன.

 

கழிவுகளை மறுசுழற்சி

ரத்னகிரியில் தினமும் உற்பத்தியாகும் 3000 கன மீட்டர் திரவ கழிவுப் பொருளில்  கிட்டத்தட்ட 50% வரை  பாய்லர் ஃபீட்  தர நீராக சுத்திகரிக்கப்பட்டு, தொழிற்சாலையில் மறுபயன்படுத்தப்படுகிறது

மீதமுள்ள கழிவு, பிரதான, இரண்டாவது, மூன்றாவது சுத்திகரிப்பு வசதிகள் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமுள்ள சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில்  மஹாராஷ்ட்ரா மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தின் விதிகளுக்கு ஏற்ப முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர்  தொழிற்சாலையின் வளாகத்தில் 150 ஏக்கர்கள் பரவியுள்ள எங்கள் தோட்டத்தில் நீர்பாசனத்திற்கு பயன்படுத்துகிறது.

ஃபினோலெக்ஸ் தங்கள் தொழிற்சாலைகளில் பூஜ்யக் கழிவு எனும் கோட்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளது. எங்கள் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவு எதுவுமே வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.  தொழிற்சாலையில் இரவு பகலாக இது கண்காணிக்கப்படுகிறது.

 

பசுமை பெல்ட்

1990ருக்கு முன் ஒரு பழைய தரிசு நிலமாக இருந்த தொழிற்சாலை இடம் இன்று ஒரு பசுமை வளையமாகிவிட்டது. மாங்காய், முந்திரி, தேங்காய், பாக்கு உள்பட 50000துக்கு மேற்பட்ட பல வகை மரங்கள் 150 ஏக்கர் பரந்துள்ள பகுதியில் நடப்பட்டுள்ளன.

 

திட கழிவு மேலாண்மை

ஃபினோலெக்ஸ் தன் தொழிற்சாலையில் உலக தரம் வாய்ந்த திடக்கழிவு பராமரிப்பிற்கு உறுதி எடுத்திருக்கிறது. கேடு விளைவிக்கும் கழிவு அங்கீகரிக்கப்பட்ட கேடு விளைவிக்கும் கழிவு நீக்கும் நிலையம் தலோஜாவில் மும்பை கழிவு பராமரிப்பின் மூலம் நீக்கபப்டுகிறது.  எலக்ட்ரானிக் கழிவு மஹாராஷ்ட்ரா மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தினால் அங்கீகரிக்கபப்ட்ட நிலையமான ஈகோ ரீஸைக்கிளிங்க் லிமிடெட்டால் நீக்கப்படுகிறது.

மக்கக் கூடிய  சமையலறை கழிவு  இயந்திரங்களின் மூலம் வீணான உணவு உயிரியல் உரமாக மாற்றப்படுகிறது. தாவரக் குப்பை நசுக்கப்பட்டு, பெல்லட்டுகளாக மாற்றப்பட்டு, சமையலறையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 

ஒலி மாசு

அந்தந்த மாநில ஆணையங்களால் குறிப்பிடப்பட்ட அளவுகளில் ஒலியை பராமரிப்பதை தொழிற்சாலை உறுதி செய்கிறது.  தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் ஒலி கண்காணிக்கப்படுகிறது. அதிக ஒலியுள்ள பகுதிகளில், உதாரணமாக கம்ப்ரெஸ்ஸர் மற்றும் ப்ளோயர் ஹவுஸ்களில்  காதுகளை பாதுகாக்க ( காது மஃப்ஃபுகள் மற்றும் காது ப்ளக்குகள்) எச்எஸ்ஈ வழிகாட்டுதலின் படி கட்டாய தேவையாக உள்ளன.

 

எனர்ஜி சேமிப்பு மற்றும் ஏனைய முயற்சிகள்

கச்சாப் பொருள் மற்றும் ரசாயன உபயோகம் கவனமாக கண்காணிக்கப்பட்டு,  நஷ்டம் குறைந்தபட்சமாக வைக்கப்படுகிறது. ஃபினோலெக்ஸ் பயன்பாடு அளவுகள் உலகம் முழுவதும் இது போன்ற தொழிற்சாலையின்  அளவுடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளது.

எங்கள் விளக்குகளை மின்சாரத்தை சேமிக்கும்  எல்ஈடிக்களாக மாற்றுவதுடன்,  புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் உற்பத்திக்காக சோலார் பேனல்களை பொருத்தும் சாத்தியகூறையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.

 

ஆரோக்கியம்

ஊழியர் ஆரோக்கியமும், உடல்நலனும் ஃபினோலெக்ஸில் பெரும் முக்கியத்துவம் கொண்டுள்ளது.  புதிதாய் வேலையில் சேரும் அனைவருக்கும் வேலைக்கு முன்னதாக  மருத்துவ சோதனையுடன் ஆரம்பிக்கும் இந்த பயணத்தில் பொது சோதனை, ஹீமோகிராம், லிவர் ஃபன்க்ஷன் சோதனை, ரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பு போன்றவை அடங்கும்.

ஊழியரின் நலனை பராமரிக்க பொதுவாக நாங்கள் வருடாந்திர காலெண்டரை பின்பற்றுகிறோம். மருத்துவ ஆலோசனையுடன் பணிபுரியும் ஊழியர்களின் சுயவிவரத்தை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய நோயறியும் பரிசோதனைகள் கிடைக்கின்றன. எங்கள் தொழில் சுகாதார மையத்தில் அவர்களின் நலன் கண்காணிக்கப்படுகிறது.  ரத்னகிரி மையம்  ஒரு ஆம்புலன்ஸ், 6 படுக்கைகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆண் நர்ஸ்களின் 24 மணி நேர சேவைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. டாக்டர்கள் 24 மணி நேரமும் அங்கே உள்ளனர்.

 

தீயணைப்பு பாதுகாப்பு

அவசரகால முன்னேற்பாட்டிற்கு, போலிப்பயிற்சிகளும், நெருப்பு பயிற்சிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன.  ஃபினோலெக்ஸ் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத்துறையில் நவீன தீயணைப்பு உபகரணங்களும், சுய பாதுகபபு உபகரணங்களும் உள்ளன. சுலபமாக அணுக  மேனுவல் கால் பாயின்டுகள் (எம் சி பி)  பல இடங்களில் உள்ளன.  விபத்தை சமாளிக்க முழுமையான உபகரணங்கள் கொண்ட மூன்று தீயணைப்பு வண்டிகள் 24 மணி னேரமும் தயார் நிலையில் உள்ளன. வளாகம் முழுவது அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பு நீர் நெட்வொர்க் ஓடிக்கொண்டிருக்கிறது. உகந்த தீயணைப்பு நீர் பம்புகள் தயர நிலையில் உள்ளன,  ஹெட்டர் பிரஷர் குறைவதற்கேற்ப அடுத்தடுத்து இயங்க தயாராக உள்ளன.  கள அவசரநிலை மேலாண்மை திட்டம் அடிக்கடி பயிற்சி செய்யப்படுகிறது.

 

வேலை வாய்ப்பு

உள்ளார்ந்த வளர்ச்சியை நாங்கள் நம்புகிறோம், ஃபினோலெக்ஸிற்கு சுற்றுப்புறமுள்ள பகுதிகளில் வாழும் சமூகங்களும் வளர்ந்து செழிக்க வேண்டும். ரத்னகிரியிலுள்ள 600 றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள தொழிற்சாலையில் 70% வேலை வாய்ப்பு ரத்னகிரி மாவட்டம் மற்றும் கொங்கன் மண்டல உள்ளூர் பகுதியிலுள்ளவர்க்கே வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான  வேலைவாய்ப்புகள் எங்கள் சுற்றுச்சூழலின் செழுமைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன.

 

திறன் வளர்ச்சி

திறமையான மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் வசதிகளுடன் நாட்டின் 2 வது மிகப்பெரிய PVC உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. அதனால்தான், ஃபினோலெக்ஸ் நிறுவனத்திற்கு அதன் மனிதவளம் கல்வி மற்றும் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதை உறுதி செய்வதற்கு, நாங்கள் முக்கிய தொழில்நுட்ப திறனிலுள்ள  இடைவெளிகளைக் கண்டறிந்து, உள் / வெளிப்புற பயிற்சி திட்டங்களின் மூலம் சரியான பயிற்சி உள்ளீடுகளுடன் அந்த இடைவெளிகளை நிரப்புகிறோம்.

 

சிஎஸ்ஆர்

எங்கள் சிஎஸ் ஆர் நடவடிக்கைகள் கல்வி, உடலாரோக்கியம், சமூக மேம்பாடு மற்றும் நீர்வரத்தில் கவனம் செலுத்துகின்றன.  ரத்னகிரியில் தொழிற்சாலைக்கு அருகே ஃபினோலெக்ஸ் ஒரு பொறியியல் கல்லூரியையும், ஆங்கில வழி பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகிறது. அருகிலுள்ள பள்ளிகளுக்கும் நாங்கள் நிதி உதவியை வழங்குகிறோம்.

எங்கள் நிலயத்தை சுற்றி அடிப்படை உடல்நலத்தை ஊக்குவிக்க  மருத்துவ முகாம்களை  நடத்துகிறோம், மம்மோகிராஃபி மையங்களை இயக்குகிறோம், செரபரல் பால்ஸிக்கு ஃபிஸியோதெரபி மையங்களை நடத்துகிறோம்.

மகளிருக்கான திறன் மேம்பாடு, கோவில்களை கட்ட நங்கொடை போன்று சுற்றுப்புற கிராமங்களில் பல வித சமூக மேம்பாட்டு  திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய கிராமின் பே ஜல் திட்டத்திற்கு நாங்கள் நிதி வழங்கி,  எங்கள் சுற்றுப்புறத்தில் சுத்தமான குடி நீரை வழங்க உதவுகிறோம்.

 

கவர்னன்ஸ்

எங்கள் நிர்வாக ஆளுமை எங்கள் கலாச்சாரம், கொள்கைகள் மற்றும் பங்குதாரர்களுடன் எங்கள் உறவு போன்றவற்றில்  எங்கள்  மதிப்பீடு முறையை பிரதிபலிக்கிறது.  எல்லா சமயங்களிலும் எங்கள் பங்குதாரர்களின் நம்பிக்கையை பெற்று அதனை தக்க வைத்துக்கொள்வதை உறுதி செய்ய எங்கள் நிர்வாக ஆளுமை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது அவசியம்.

சரியான நேரத்தில் நாங்கள் எங்கள் நிதி மற்றும் செயல்திறனை பற்றிய துல்லியமான தகவலையும், ஃபினோலெக்ஸின் தலமை மற்றும் ஆளுமை சம்பந்தப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்வதை எங்கள் நிர்வாக ஆளுமை அமைப்பு உறுதி செய்கிறது. நிர்வாக மேலாண்மையில்  உயர் தரத்தை உறுதி செய்ய  சுறுசுறுப்பான, விவரம் அறிந்த சுதந்திரமான போர்ட் அவசியம் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஃபினோலெக்ஸில் எங்கள் நிர்வாக ஆளுமை நடவடிக்கைக்கு போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மையமாக உள்ளனர்.  மேலாண்மை செயல்பாடுகளை போர்ட் கவனித்து  எங்கள் பங்குதாரர்களின் நீண்டக்கால நலன்களை பாதுகாக்கிறது.

 

விசாரணை வடிவம்

For any trade enquiry call

18002003466

Enquiry Form

Fill in the details below and one of our executives will get back to you shortly.